உலகிற்குத் துணைபுரியும் சீனாவின் சீர்திருத்தம்
2022-07-05 19:05:17

சீனத் துணை தலைமை அமைச்சர் லியூ ஹே 5ஆம் நாள் அமெரிக்க நிதித் துறை அமைச்சர் யேல்லனுடன் காணொளி தொடர்பு கொண்டார். இது பற்றிய கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாவ் லிஜியன் கூறுகையில், சீனப் பொருளாதாரத்தின் வெற்றி, சீர்திருத்தம் மற்றும் திறப்புக் கொள்கையின் வெற்றியும், சந்தை இயங்குமுறை அரசின் பங்கினையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதன் வெற்றியும் ஆகும் என்பதை கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலான உண்மைகள் வெளிக்காட்டியுள்ளன என்று தெரிவித்தார்.

சீனாவுக்கு மட்டுல்ல உலகிற்கும் துணைபுரியும் சீனாவின் சீர்திருத்தம், சீனப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதோடு உலகப் பொருளாதாரத்தின் செழுமைக்கும் முக்கிய பங்காற்றியுள்ளது என்றும், சீனா மீதான கூடுதல் வரிகள் அனைத்தையும் நீக்குவது, சீனா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் மட்டுமல்ல, முழு உலகிற்கும் துணைபுரியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.