சீனா மற்றும் அமெரிக்கா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை
2022-07-06 09:42:14

சீனத் துணை தலைமை அமைச்சரும், சீன-அமெரிக்க பன்முகப் பொருளாதார பேச்சுவார்த்தைக்கான சீன தரப்பின் பொறுப்பாளருமான லியூ ஹெ அமெரிக்க நிதித் துறை அமைச்சர் ஜேனட் யெல்லனுடன் 5ஆம் நாள் காணொளி வழியாகப் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இரு நாட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தகத் துறையின் தலைவர்களிடையில் 2022ஆம் ஆண்டில் முதன்முறையான உரையாடல் இதுவாகும். பைடன் அரசு பதவியேற்ற ஒன்றரை ஆண்டு காலத்தில், இரு நாட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தகத் துறைத் தலைவர்கள் 5 முறை கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.

5ஆம் நாள் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உலக விநியோக சங்கிலியின் நிலைப்புத் தன்மை ஒரு புதிய கருப்பொருளாக விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்பு இரு நாட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தக உயர் நிலை அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் அமெரிக்க தரப்பு இந்த அம்சத்தை முன்வைக்கவில்லை. இப்போது அமெரிக்காவில் கடு பணவீக்கம் நிலவுவது அமெரிக்க தரப்பு இப்பிரச்சினையை அவசரமாகக் குறிப்பிட்டுள்ளது. பணவீக்கத்தைச் சமாளிப்பதற்கான திறவுகோலாக விநியோகச் சங்கிலி நிகழ்ந்து வருகிறது.