சீன மற்றும் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு
2022-07-06 15:10:40

20 நாடுகள் குழுவின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் போது, சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கனுடன் சந்திப்பு நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்குச் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சாவ் லிஜியன் 5ஆம் நாள் பதிலளிக்கையில், அழைப்பின் பேரில் முக்கிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் பிரதேசங்களின் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் இரு தரப்பு சந்திப்புகளை வாங் யீ நடத்துவார். இக்கூட்டத்தின் போது இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு நடத்தி, தற்போதைய சீன-அமெரிக்க உறவு, முக்கிய சர்வதேச மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த பிரச்சினைகள் ஆகியவை குறித்து ஆலோசிப்பர் என்று சீன மற்றும் அமெரிக்க கலந்தாய்வு மூலம் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்தார்.