தவறான திசையில் செல்கிறது அமெரிக்கா: 88 விழுக்காடு அமெரிக்கர் கருத்து
2022-07-06 10:22:46

மான்மவுத் பல்கலைக்கழகம் 5ஆம் நாள் வெளியிட்ட மக்கள் கருத்து கணிப்பின் படி, அமெரிக்கா தவறான திசையில் நடந்து சென்று கொண்டிருக்கிறது என்று 88 விழுக்காட்டினர் கருதுகின்றனர். அமெரிக்கா சரியான திசையில் வளர்ந்து வருவதாக 10விழுக்காட்டினர் மட்டுமே கூறியுள்ளனர். இது, 2013ஆம் ஆண்டு நடைபெற்ற கருத்து கணிப்புக்குப் பிறகு  பதிவான மிகவும் தாழ்ந்த பதிவாகும்.  

இயற்கை எரிவாயு விலை உயர்வு, பண வீக்கம் ஆகியவை மிகப் பெரிய கவலையாக உள்ளது என்று சுமார் 50விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.

மோசமாகி வரும் பொருளாதார நிலைமையால் அமெரிக்கர்களிடையில் அரசு மீதான அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.