பிரிட்டனில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி
2022-07-06 10:27:14

பிரிட்டன் மற்றும் உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலம் மிகவும் மோசமாகி வருகின்றது என்று பிரிட்டன் வங்கி ஜூலை 5ஆம் நாள் எச்சரித்தது. உலகின் பல்வேறு இடங்களில் எரியாற்றல் மற்றும் எரிபொருட்களின் விலை வேகமாக அதிகரித்து வருகின்றது. இதனால் வாழ்க்கைச் செலவுகளும் அதிகரித்து வருவதாக இவ்வங்கி தெரிவித்தது.

இவ்வங்கி புதிதாக வெளியிட்ட நிதி நிதான அறிக்கையில், பிரிட்டனின் வங்கித் துறை, கடுமையான பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிப்பதற்கு ஆயத்தம் செய்து வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.