7வது உலக சிந்தனை கிடங்கு உச்சி மாநாடு துவக்கம்
2022-07-06 16:59:09

7வது உலக சிந்தனை கிடங்கு உச்சி மாநாடு ஜூலை 5ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் தலைவர் ஹுவாங் குன்மிங் பெய்ஜிங்கிலிருந்து காணொளி வழியாக உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், உலக வளர்ச்சிக்கான முன்மொழிவு 100க்கும் மேலான நாடுகளின் உறுதியான ஆதரவைப் பெற்றுள்ளது. உலக சிந்தனை கிடங்கு துறையினர்கள் இம்மாநாட்டை வாய்ப்பாகக் கொண்டு, உலக வளர்ச்சிக்கான ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்கும், உலக வளர்ச்சிக்கான பொது சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்றுவதற்கும் மேலதிக ஆற்றலை வழங்க வேண்டும் என்றார்.

30க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த முன்னாள் அரசியல் தலைவர்கள், சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்கள், சிந்தனை கிடங்கு பிரதிநிதிகள் உள்ளிட்ட 100 பேர் இம்மாநாட்டில் பங்கெடுத்தனர். உலக வளர்ச்சியின் முக்கிய கட்டத்தில், பலதரப்பு வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பை முன்னேற்றுவது மிகவும் முக்கியம் என்று சீன மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கருதினர்.