அமெரிக்காவின் போர் விசைப்பொறிக்குப் புதிய சான்று
2022-07-06 10:56:35

அமெரிக்காவின் தி இன்டர்செப்ட் எனும் புலனாய்வு இணையத்தளத்தில் வெளியான புதிய தகவலின்படி, 2017ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை, அமெரிக்கா, “127ஈ”என்ற திட்டப்பணி மூலம், உலகளவில் குறைந்தபட்சம் 23 ப்ராக்சி போர்கள், அதாவது நேரடியற்ற போர்களைத் தொடுத்துள்ளது. இவற்றில் 14 போர்கள் மத்திய கிழக்கு மற்றும் ஆசிய-பசிபிக் பிரதேசங்களில் நடத்தப்பட்டவை என்று தெரிவிக்கப்பட்டது. இத்தகவல் உண்மையாக இருந்தால், உலகில் கலவரங்களின் ஊற்று மூலம், அமெரிக்கா என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்படும்.

2வது உலகப் போர் முடிந்து, பனி போர் தொடங்கியது முதல், நேரடியற்ற முறையில் போர் தொடுப்பது, உலகளாவிய மோதல்களின் முக்கிய வடிவங்களில் ஒன்றாகும். ஜுலை 4ஆம் நாள், அமெரிக்க சுதந்திரத் தினம். கடந்த சுமார் 240 ஆண்டுக்காலத்தில், போரில் அமெரிக்கா ஈடுபடாத காலம், 20 ஆண்டுகளை விடக் குறைவு. செல்வம் மற்றும் மேலாதிக்கவாதம் அதன் உந்து சக்தியாகும். ஆனால், அப்பாவி மக்களின் உயிரிழப்பும், பிராந்திய நிலைமையின் குழப்பமும் இதனால் ஏற்பட்டுள்ளன. அமெரிக்க அரசியல்வாதிகள் இறுதியில் பதில் விலை கொடுக்க நேரிடும்.