மனித உரிமை பேணிக்காப்பதில் சீனாவின் பங்கு
2022-07-06 18:30:45

ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் 50ஆவது கூட்டத்தின் போது, உலக மனித உரிமை நிர்வாகத்தை வலுப்படுத்தி, மனித குலத்தின் கூட்டு மதிப்பை வெளிப்படுத்துவது என்ற கூட்டம் 5ஆம் நாள் காணொளி வழியாக நடைபெற்றது. மனித உரிமை துறையில்  நிறைய சாதனைகளை பெற்றுள்ள சீனா, உலக மனித உரிமை நிர்வாகத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. பல்வகை மனித உரிமை வளர்ச்சியின் பல்வகைமைக்கு சர்வதேச சமூகம் மதிப்பு அளிக்க வேண்டும். தனி ஒரு வரையறையின் மூலம் பின்பற்றி மனித உரிமை வளர்ச்சியை மதிப்பீடு செய்ய கூடாது என்று இக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

அரசியல்மயமாக்கப்பட்ட மனித உரிமையை சில நாடுகள் பயன்படுத்தி, இதர நாடுகளின் உள் விவகாரங்களில் தலையீடு செய்ய முயற்சி செய்கின்றன. இது குறித்து, ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் ஆலோசனை ஆணையத்தின் உறுப்பினர் லியு சின்சென் கூறுகையில்,

மனித உரிமை பாதுகாப்பு திறனை உயர்த்தும் வகையில், வளரும் நாடுகள் ஒற்றுமையை வலுப்படுத்தி, மனித உரிமை பற்றி சொந்த கருத்துக்களை வெளிப்படுத்தி, ஒத்துழைப்பு மேற்கொள்ள வேண்டும் என்றார்.