உலகளவில் 2ஆவது இடத்திலுள்ள சீன எண்ணியல் பொருளாதாரம்
2022-07-06 17:22:53

எண்ணியல் சீனா பற்றிய 5ஆவது உச்சிமாநாடு ஜுலை 23, 24 ஆகிய நாட்களில் ஃபூஜியன் மாநிலத்தின் ஃபூசோ நகரில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக ஜுலை 5ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், சீனத் தேசிய இணையத் தகவல் பணியகத்தின் பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், 2017 முதல் 2021ஆம் ஆண்டு வரை சீனாவின் எண்ணியல் பொருளாதார அளவு 27 லட்சம் கோடி யுவானிலிருந்து 45 லட்சம் கோடி யுவானாக அதிகரித்து, உலகின் 2ஆவது இடத்தில் உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் எண்ணியல் பொருளாதாரத்தின் விகிதம் 39.8 விழுக்காடாக உயர்ந்து, வளர்ச்சிக்கான அதன் இயக்காற்றல் வேகமாக வெளிக்கொணரப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.