சீன நிறுவனங்களுக்கு சீரான வணிகச் சூழலை உருவாக்க வேண்டும்:சீனா விருப்பம்
2022-07-06 19:46:46

இந்திய சட்ட அமலாக்கத் துறை சீன கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான விவோ மற்றும் அதனுடன் தொடர்புடைய பல இடங்களில் திடீர் சோதனை நடத்தியது. இது குறித்த கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாவ் லிஜியன் 6ஆம் நாள் பதிலளிக்கையில், இச்சம்பவத்தில் சீனா கவனம் செலுத்தி வருகிறது. சீனத் தொழில் நிறுவனங்கள் வெளிநாடுகளில் சட்டப்படி செயல்படுமாறு சீன அரசு கோருவதோடு, அவை தங்களது சட்டப்பூர்வ உரிமை நலன்களைப் பேணிக்காப்பதற்கும் ஆதரவளிக்கிறது என்று கூறினார். மேலும், இந்திய தரப்பு சட்டம் மற்றும் விதிமுறையின்படி சோதனை மேற்கொண்டு, சீன தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து இயங்குவதற்கு சமமான, நியாயமான மற்றும் பாகுபாடு இல்லாத வணிகச் சூழலை வழங்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.