ரஷிய-இலங்கை அரசுத் தலைவர்கள் தொலைபேசி தொடர்பு
2022-07-06 20:16:35

கிரெம்லின் மாளிகை வெளியிட்ட தகவலின்படி, ரஷிய அரசுத் தலைவர் புதின் ஜுலை 6ஆம் நாள் அழைப்பின் பேரில் இலங்கை அரசுத் தலைவர் ராஜபக்சேவுடன் தொலைபேசியில் தொடர்புக் கொண்டார்.

இருதரப்பு வர்த்தகம் பற்றியும், பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான சூடான பிரச்சினைகள், குறிப்பாக எரியாற்றல், விவசாயம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளிலான ஒத்துழைப்புகள் பற்றியும் அவர்கள் விவாதம் நடத்தினர்.

ரஷிய-இலங்கை தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 65ஆவது ஆண்டு நிறைவாகும். இந்நிலையில், பாரம்பரிய நட்புறவை மேலும் வளர்க்க விரும்புவதாகவும் இருதரப்பும் தெரிவித்துள்ளன.