கூடுதல் சுங்க வரி வசூலிப்பை நீக்குவது அமெரிக்காவுக்குத் துணை புரியும்
2022-07-07 18:42:20

சீன வணிக அமைச்சகம் 7ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் செய்திதொடர்பாளர் ஷு யுடிங் அம்மையார் கூறுகையில்,

ஜுலை 5ஆம் நாள் காலை, சீன துணை தலைமை அமைச்சர் லியு ஹெ, அழைப்பை ஏற்று, அமெரிக்க நிதி அமைச்சர் யெல்லன் அம்மையாருடன் தொடர்பு கொண்டார் என்றார்.

சீனாவின் மீதான கூடுதல் சுங்க வரி வசூலிப்பை நீக்குவது, சீன தொழில் நிறுவனங்களுக்கு சமமான அணுகுமுறையை மேற்கொள்வது ஆகிய பிரச்சினைகளில் சீனா கவனம் செலுத்துகின்றது. சீனாவின் மீதான கூடுதல் சுங்க வரி வசூலிப்பை அமெரிக்கா முழுமையாக நீக்குவது, இரு நாடுகளுக்கும் உலகிற்கும் பயன் தரும் என்று சீனா நம்புவதாக அவர் தெரிவித்தார்.

இரு நாடுகள் கூட்டாக முயற்சி செய்து, பொருளாதார வர்த்தக ஒத்துழைப்புகளுக்கு சீரான சூழலையும் நிலைமைகளையும் உருவாக்கி, உலக வர்த்தகம் மற்றும் தொழில் சங்கிலியின் நிதானத்தைப் பேணிக்காத்து, இரு நாடுகளுக்கும் இரு நாட்டு மக்களுக்கும் நன்மை புரிய வேண்டும் என்று ஷு யுடிங் அம்மையார் தெரிவித்தார்.