2021ல் உலகளவில் பட்டினியால் பாதிக்கப்பட்ட மக்கள் தொகை 82.8 கோடி
2022-07-07 17:43:13

ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பு உள்ளிட்ட ஐ.நாவின் 5 நிறுவனங்களால் கூட்டாக வரையப்பட்ட 2022ஆம் ஆண்டிற்கான உலக உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலைமை எனும் அறிக்கை 6ஆம் நாள் வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையின்படி, 2021ஆம் ஆண்டில் உலகளவில் பட்டினியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 82.8 கோடியை எட்டியது. இது, 2020ஆம் ஆண்டில் இருந்ததை விட 4.6 கோடி அதிகமாகும். இதனிடையே, உணவு பாதுகாப்பற்ற நிலையில், பாலின இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. உலகளவில் 31.9 விழுக்காடு பெண்கள் நடுத்தர அல்லது கடும் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தனர். ஆண்களில் இவ்விகிதம் 27.6 விழுக்காடாகும்.

ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பின் தலைமை இயக்குநர் ஜு டொங்யூ கூறுகையில், தற்போது உக்ரைனில் நடந்து வரும் மோதலும், உலகின் பல்வேறு இடங்களில் நீண்டகாலமாக நிலவும் மோதல்களும், வினியோகச் சங்கிலியை மேலும் குழப்பமாக்குவதோடு, உணவு, தானியம், உரம், எரிபொருள் ஆகியவற்றின் விலை உயர்வையும் தீவிரமாக்கி வருகின்றன என்று தெரிவித்தார்.