28ஆவது லன்ச்சோ வணிக பொருட்காட்சி துவக்கம்
2022-07-07 20:14:15

சீன வணிக அமைச்சகம், சீன தேசிய சந்தை ஒழுங்குமுறைக்கான நிர்வாகம் முதலியவற்றின் கூட்டு ஏற்பாட்டில் 28ஆவது சீன லன்ச்சோ முதலீடு மற்றும் வர்த்தகப் பொருட்காட்சி 7ஆம் நாள் கன்சூ மாநிலத்தின் தலைநகர் லன்ச்சோவில் துவங்கியது.

மலேசியாவும், ஐக்கிய அரபு அமரகமும் இப்பொருட்காட்சியின் கௌரவ விருந்தினர் நாடுகளாகும். ஸ்பேயின், பாகிஸ்தான், தாய்லந்து, இன்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளின் தூதரகங்கள் மற்றும் வணிக சங்கங்களையும் சீனா மற்றும் வெளிநாடுகளின் பல தொழில் நிறுவனங்களையும் இப்பொருட்காட்சி ஈர்த்துள்ளது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவுக்குக் கூட்டு பங்களிப்பு, இரட்டை சுழற்சியான புதிய பொருளாதார வளர்ச்சியில் பங்கெடுப்பு ஆகியவை குறித்து பல்வேறு தரப்புகள் விவாதித்தன.

இப்போது வரை, இப்பொருட்காட்சியில் கையொப்பமிடப்படும் திட்டப்பணிகளின் ஒப்பந்த மதிப்பு 43 ஆயிரம் கோடி யுவான் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.