ஆக்கிரமிப்புக்கு எதிரான தேசிய போர் மூண்ட 85ஆவது ஆண்டு நிறைவு
2022-07-07 18:16:11

ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான தேசிய போர் மூண்ட 85ஆவது ஆண்டு நிறைவுக்கான நினைவு நடவடிக்கை ஜுலை 7ஆம் நாள் சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்பு போர் நினைவகத்தில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர் வாங் ஹுநிங் இதில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், 85 ஆண்டுகளுக்கு முன் ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர் முழு சீனாவையும் கைப்பற்றும் தீய நோக்கத்துடன் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அதிர்ச்சியை ஏற்படுத்திய லூகோவ்ஜியாவ் சம்பவத்தை நிகழ்த்தியது. சீனப் படை வீரர்களும் பொது மக்களும் இதற்கு எதிராகப் போராடி, உலக பாசிஸ எதிர்ப்புப் போரின் முக்கிய கீழை நாட்டுக் களத்தை உருவாக்கினர். மாபெரும் போராட்ட எழுச்சியைக் கையேற்றி பரவல் செய்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையைப் கடைப்பிடிப்பதும், அமைதியான வளர்ச்சிப் பாதையில் உறுதியுடன் நடைபோட்டு, மனிதகுலத்தின் அமைதியான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு பங்காற்றுவதும் இந்த நினைவு நடவடிக்கையை மேற்கொள்வதன் நோக்கமாகும் என்று தெரிவித்தார்.