சீனாவின் சேவைக்கான வர்த்தகம் அதிகரிப்பு
2022-07-07 20:04:06

இவ்வாண்டின் ஜனவரி முதல் மே திங்கள் வரை, சீனாவின் சேவைக்கான வர்த்தகம் தொடர்ச்சியாக சீரான அதிகரிப்பைப் பெற்று வந்துள்ளது. சேவைக்கான மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை 2 லட்சத்து 36 ஆயிரத்து 536 கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 22விழுக்காடு அதிகமாகும். மே திங்களில் இந்தத் தொகை 45 ஆயிரத்து 628 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 22.2 விழுக்காடு அதிகமாகும்.

அறிவாற்றல் அதிகம் சேவைக்கான வர்த்தகம் சீரான வளர்ச்சியடைவது, சுற்றுலா சேவைக்கான ஏற்றுமதி இறக்குமதி மீட்சி அடைவது ஆகியவை, இவ்வாண்டின் முதல் 5 திங்களில் சீனச் சேவை வர்த்தகத்தின் முக்கிய தனிச்சிறப்புகளாகும் என்று சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சு யீடிங் கூறினார்.