பிரிக்ஸ் நாடுகளின் எண்முறை பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்க சீனா விருப்பம்
2022-07-07 10:26:05

ஒன்றுடன் ஒன்று இணைப்பை மேலும் வலுப்படுத்தி பிரிக்ஸ் நாடுகளின் எண்முறை பொருளாதார வளர்ச்சி மற்றும் செழுமையைக் கூட்டாக முன்னெடுப்பதில் சீனா பல்வேறு தரப்புகளுடன் இணைந்து செயல்பட விரும்புகிறது. சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரி 6ஆம் நாள் நடைபெற்ற 8ஆவது பிரிக்ஸ் நாட்டுத் தகவல் தொடர்புத் துறை அமைச்சர்களின் கூட்டத்தில் இதைத் தெரிவித்தார்.

சீனா, தென்னாப்பிரிக்கா, பிரசேல், ரஷியா, இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் தகவல் தொடர்புத் துறை அதிகாரிகளும் உலகத் தொலை தொடர்பு ஒன்றியத்தின் பொறுப்பாளர்களும் காணொளி வழியாக இக்கூட்டத்தில் பங்கேற்றனர். 

புதிய ரக தகவல் தொடர்பு அடிப்படை வசதிகளின் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், 5ஜி மற்றும் 6ஜி, செயற்கை நுண்ணறிவு முதலிய துறைகளில் பிரிக்ஸ் நாடுகளுடன் இணைந்து கூட்டு ஆய்வை மேற்கொள்ளவும் சீனா விரைவுபடுத்துவதாகவும் சீனா செயல்படும்.