பிரிட்டன் அமைச்சர்கள் பலர் பதவி விலகல்
2022-07-07 18:29:46

தொற்று நோய் தடுப்பு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது உள்ளிட்ட துறைகளில் தலைமை அமைச்சர் போரிஸ் ஜான்சனின் செயல்பாடு குறித்து மனநிறைவின்மை கொண்டிருப்பதால், அந்நாட்டின் பொது மக்கள் பலர் 6ஆம் நாள் லண்டனிலுள்ள தலைமை அமைச்சர் இல்லத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தி, போரிஸ் ஜான்சன் பதவியிலிருந்து விலகுமாறு கேட்டுக் கொண்டனர்.

மேலும், பதவியிலிருந்து விலக போரிஸ் ஜான்சன் மறுத்த பிறகு, வடக்கு அயர்லாந்து விவகாரத்துக்கான அமைச்சர் பிலாண்டன் லூயிஸ் பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்தார்.

ஜுலை 5ஆம் நாள் முதல் தற்போதுவரை தலைமை அமைச்சர் மீதான நம்பிக்கை இழந்ததால் பதவியிலிருந்து விலகிய அரசு அதிகாரிகளின் எண்ணிக்கை 50க்கும் மேலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.