மனித உரிமையை மீறிய அமெரிக்காவின் மீது ஈரானி்ன் குற்றஞ்சாட்டு
2022-07-07 16:49:18

இதர நாடுகளின் மீது அமெரிக்கா மேற்கொண்ட ஒரு தரப்பு பொருளாதாரத் தடை நடவடிக்கை, மனித உரிமையை வெளிப்படையாகவும் முறையாகவும் மீறியுள்ளது என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் அமெரிக்காவின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் நிகழ்ச்சியின் போது வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

அரசியல் இலக்கை நனவாக்கும் விதம், பொருளாதார கருவிகளை, பொருளாதாரப் பயங்கரவாதமாக அமெரிக்கா மாற்றியுள்ளது. ஈரானின் மீது அமெரிக்கா மேற்கொண்ட கடும் தடை நடவடிக்கைகளும் பொருளாதாரப் பயங்கரவாதமும், ஈரானின் உற்பத்தி, வேலை வாய்ப்பு, தேசிய வருமானம் ஆகியவற்றுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இதனால், பொது மக்களின் வருமானம் குறைந்து வருவதோடு சமூக வளர்ச்சியும் மந்தமாகியுள்ளது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.