மக்களுக்குப் பதிலாக வாக்குகளையே முதலில் கருத்தில் கொள்ளும் அமெரிக்க அரசு
2022-07-08 15:50:25

புதிய உயர் பதிவாகியுள்ள பண வீக்க அழுத்தத்தைக் குறைக்கும் விதம், சீன வணிகப் பொருட்களுக்கு கடந்த அரசு விதித்துள்ள கூடுதல் சுங்க வரிகளின் ஒரு பகுதியை நீக்குவது குறித்து அமெரிக்கா விவாதம் நடத்தி வருவதாக அந்நாட்டின் ஊடகங்கள் அண்மையில் தகவல்களை வெளியிட்டன.

அமெரிக்காவில், அரசியல்வாதிகளின் தீவிரச் சுயநலன், வேறுபட்ட குழுக்களுக்கு இடையேயான போட்டிகள் ஆகியவற்றின் காரணமாக, பல திட்டங்கள் சீராக நிறைவேற்றப்பட முடியவில்லை. நாட்டின் நலன்களுக்காகவும், தொழில் நிறுவனங்கள் மற்றும் பொது மக்களின் தேவைகளுக்காகவும் அமெரிக்க அரசியல்வாதிகள் சொந்த அரசியல் இழப்புக்குப் பொறுப்பேற்க மாட்டார்கள். இறுதியில் வாக்குகளுக்காகவே அவர்கள் செயல்படுவர். சீனப் பொருட்களின் மீதான கூடுதல் சுங்கவரி வசூலிப்பை நீக்குவதில், அமெரிக்க அரசு தாமதமாகச் செயல்பட்டால், அந்நாட்டின் பொருளாதாரம் அதிக அளவில் பாதிக்கப்படும். இவை பற்றி அனைவரும் நன்கு அறிந்து கொண்டுள்ளனர்.

சீனா மீது அமெரிக்கா தொடுத்த வர்த்தகப் போர் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளதை கடந்த 4 ஆண்டுகளில் காணப்பட்ட எண்ணற்ற உண்மைகள் மற்றும் தரவுகள் நிரூபித்துள்ளன.

உலகளவில் மிகப் பெரிய இரு பொருளாதாரச் சமூகங்களாக, சீனா மற்றும் அமெரிக்கா ஒத்துழைத்தால், இருதரப்புகளுக்கும் உலகிற்கும் நன்மைகளைத் தர முடியும். இதற்கு மாறாக இருந்தால் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதும் உண்மைகளால் திரும்ப திரும்ப நிரூபிக்கப்பட்டுள்ளது.