© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040

21வது “சீன மொழி பாலம்”என்னும் உலகப் பல்கலைக்கழக மாணவர்களின் சீன மொழி போட்டியைச் சேர்ந்த இந்தியர்களுக்கான போட்டி அண்மையில் நிறைவுப் பெற்றது. இந்தியாவில் உள்ள 20க்கும் மேலான பல்கலைக்கழகங்கள் மற்றும் சீன மொழி நிறுவனங்களைச் சேர்ந்த 25 பேர் இணைய வழியில் நடைபெற்ற இப்போட்டியில் கலந்து கொண்டனர்.
இந்தியாவிலுள்ள சீனத் தூதர் சுன் வெய்தொங் கூறுகையில், பல்வேறு நாடுகள் ஒன்றுக்கொன்று மதிப்பளித்து, ஒத்துழைப்பு மேற்கொண்டு, கூட்டாக வளர்ச்சியடையும் விருப்பங்களை இப்போட்டி வெளிப்படுத்தியுள்ளது என்றார். மேலதிக இந்திய இளைஞர்கள் சீன மொழியைக் கற்றுக்கொண்டு, சீன-இந்திய நட்புறவை முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.