பாலி தீவில் சீன-இந்திய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
2022-07-08 14:14:13

ஜி20 அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் ஜுலை 8ஆம் நாள் இந்தோனேசியாவின் பாலி தீவில் துவங்கியது. மேலும் அமைதியான, நிலையான மற்றும் செழுமையான உலகத்தைக் கூட்டாக உருவாக்குவது நடப்புக் கூட்டத்தின் கருப்பொருளாகும். 7ஆம் நாளிருந்து இவ்வமைப்பைச் சேர்ந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியுள்ளனர்.

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, 7ஆம் நாள் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கருடன் உக்ரைன் பிரச்சினை குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். சீனத் தரப்பின் 3 கவனங்களை அவர் விளக்கிக் கூறுகையில்,

முதலாவதாக, பனிப் போர் சிந்தனை மற்றும் எதிரெதிர் நிலையைத் தூண்டி விட்டு, புதிய பனிப் போரை ஏற்படுத்துவதை சீனா எதிர்க்கிறது. அமைதி பேச்சுவார்த்தையை முன்னேற்றும் பக்கத்தில் சீனா தொடர்ந்து நிலைத்து நிற்கிறது. இரண்டாவதாக, இரட்டை வரையறையை மேற்கொண்டு சீனாவின் அரசுரிமை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டைச் சீர்குலைப்பதை எதிர்க்கிறது. மூன்றாவதாக, மற்ற நாடுகளின் நியாயமான வளர்ச்சி உரிமையைச் சீர்குலைப்பதை எதிர்க்கிறது. இதனை பல்வேறு தரப்புகளும் கூட்டாகத் தடுப்பதோடு, சர்வதேச ஒத்துழைப்புக்கு பாகுபாடு இல்லாத, நியாயமான மற்றும் திறந்த சூழலை முயற்சியுடன் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.