வாங்யீ பொரெல்லியுடன் சந்திப்பு
2022-07-08 16:45:51

பாலி தீவில் நடைபெற்ற ஜி20 நாடுகள் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்ற சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ ஜூலை 7ஆம் நாள் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதாண்மை மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் நிலை பிரதிநிதி பொரெல்லியுடன் சந்திப்பு நடத்தினார்.

பொரெல்லி கூறுகையில், ஒரே சீனா என்ற கொள்கையில் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாகப் பின்பற்றி, சீனாவுடன் மேலதிக நெடுநோக்கு ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புகளை மேற்கொள்ள விரும்புகிறது என்றார்.

வாங்யீ கூறுகையில், ஐ.நாவை மையமாகக் கொண்ட சர்வதேச முறைமையையும், சர்வதேசச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கையும் ஐரோப்பாவுடன் இணைந்து பேணிக்காக்க சீனா விரும்புவதாகத் தெரிவித்தார்.