ஜூன் திங்களில் சீன நுகர்வு விலை குறியீட்டு எண் அதிகரிப்பு
2022-07-09 16:44:14

சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகம் 9ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, ஜூன் திங்களில், சீனாவில் நுகர்வு விலை குறியீட்டு எண், கடந்த ஆண்டு ஜூனை விட 2.5 விழுக்காடு அதிகமாகும். ஜனவரி முதல் ஜூன் வரை, சராசரி நுகர்வு விலை குறியீட்டு எண், கடந்த ஆண்டை விட 1.7 விழுக்காடு அதிகமாகும்.

ஜூன் திங்களில், சீனாவில் முக்கியமான அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் போதுமானதாகவும் நுகர்வோர் நிலையாகவும் இருந்துள்ளது என்றும் இப்பணியகத்தின் உயர் நிலை புள்ளியியல் நிபுணர் டோங் லிஜுவான் கூறினார்.