ஊழல் குற்றச்சாட்டில் இந்திய புல்லட் ரயில் திட்ட மேலாளர் பணிநீக்கம்
2022-07-09 16:33:10

இந்திய அரசின் புல்லட் ரயில் திட்டத்தின் தலைவர் சதீஷ் அக்னிஹோத்ரி லஞ்ச குற்றச்சாட்டுகள் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எனினும், என்ன குற்றச்சாட்டுகள் என்பது குறித்த விளக்கம் தெரிவிக்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தின் இயக்குநராக இருந்து வந்த ராஜேந்திர பிரசாத் அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அரசின் மறுஉத்தரவு வரும்வரை அவர் மூன்று மாத காலத்துக்கு இப்பதவி வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அரசின் நிதியை தவறாக பயன்படுத்தியது மற்றும் கையாடல் செய்தது, ஒரு தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அக்னிஹோத்ரி மீது வைக்கப்பட்டது. இது குறித்து விசாரிக்க சிபிஐ-க்கு ஊழலுக்கு எதிரான ஆணையமான லோக்பால் உத்தரவிட்டது நினைவுகூரத்தக்கது.