இலங்கையில் ஆர்ப்பாட்டம் – ரணில் அவசர ஆலோசனை
2022-07-09 18:54:45

இலங்கை அரசுத் தலைவர் கோத்தபய ராஜபக்சேவை பதவி விலகக் கோரி கொழும்புவில் உள்ள அரசுத் தலைவர் மாளிகையை பொதுமக்கள் 9ஆம் நாள் முற்றுகையிட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அவசர ஆலோசனை நடத்தும் விதம் கட்சித் தலைவர்களுக்கு தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன், நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு பேரவைத் தலைவரிடம் அவர் கோரியுள்ளார்.

அரசுத் தலைவர் மாளிகையின் முன்பு மக்கள் கூடுவதற்கு முன்னதாகவே, அவர் தப்பியோடி விட்டதாக ஏஎஃப்பி செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், கொழும்பிலிருந்து அவர் வெளியேறி விட்டார் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்கும்போது ஏற்பட்ட சண்டையில் காவல்துறை அதிகாரிகள் உள்பட 31 பேர் காயமடைந்தனர், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.