பிரிக்ஸ் ஊடக மன்றத்தின் செயல்திட்டம் வெளியீடு
2022-07-09 16:34:02

2022-23 ஆண்டுக்கான செயல்திட்டத்தை 5ஆவது பிரிக்ஸ் ஊடக மன்றம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

அமைதி மற்றும் வளர்ச்சி, நேர்மை மற்றும் நீதி, ஜனநாயகம் மற்றும் சுதந்திரம், வெற்றி-வெற்றி ஒத்துழைப்பு ஆகியவற்றை சர்வதேச சமூகம் நாட வேண்டும் என்றும் இச்செயல்திட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், முன்பில்லாததை விட பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான உரையாடல் தற்போது மிக முக்கியமாக உள்ளது என்றும் பிரிக்ஸ் நாடுகளின் ஊடகங்கள் பாலம் போலச் செயல்பட்டு பிரிக்ஸ் முறைமையை வலுப்படுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிய யுகத்திலான பிரிக்ஸ் ஊடக ஒத்துழைப்பைக் கருதுகையில், இணைந்து வளர்ச்சி மற்றும் பரஸ்பர பலன் என்ற கொள்கையை பிரிக்ஸ் ஊடக மன்றம் கடைப்பிடிக்க வேண்டும்.

தவிரவும், அமைதி, பொருளாதார வளர்ச்சி, கொவைட்-19-க்கு எதிரான ஒற்றுமை, உணவுப் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் எண்ணியல் நிர்வாகம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் செயல்திட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.