ஷின்சோ அபே மரணம்:ஷிச்சின்பிங் இரங்கல்
2022-07-09 16:15:05

ஜப்பானின் முன்னாள் தலைமை அமைச்சர் ஷின்சோ அபேயின் மரணம் குறித்து ஜப்பானின் தலைமையமைச்சர் ஃபுமியோ கிஷிடாக்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 9ஆம் நாள் இரங்கல் செய்தி அனுப்பினார்.

தனது பதவிக்காலத்தில் ஷின்சோ அபே சீன-ஜப்பானிய உறவுகளை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொண்டார். தற்போதைய ஜப்பானின் தலைமையமைச்சருடன் இணைந்து, சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நான்கு அரசியல் ஆவணங்களில் உறுதி செய்யப்பட்டுள்ள கோட்பாடுகளின் படி, இரு நாட்டு சுமூகமான நட்பார்ந்த உறவைத் தொடர்ந்து வளர்க்கச் சீனா விரும்புகின்றது என்றும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.