சீன-அமெரிக்க உறவு இயல்பான பாதைக்குத் திரும்ப முடியுமா?
2022-07-10 16:50:39

பாலி தீவில் 9ஆம் நாள் நடைபெற்ற சீன-அமெரிக்க வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு, கடந்த ஒரு மாதத்தில் சீன-அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான ஐந்தாவது சந்திப்பாகும்.

சீன-அமெரிக்க உறவு சிக்கில் இருப்பதற்குக் காரணம் என்ன?இதனை எவ்வாறு இயல்பான பாதைக்குக் கொண்டு வர முடியும்? ஆகிய கேள்விகளுக்கு இச்சந்திப்பின் போது சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ விளக்கம் அளித்தார்.

அமெரிக்காவிடம் நான்கு பட்டியல்களை இச்சந்திப்பில் சீனா வழங்கியது. அவற்றில் அமெரிக்கத் தரப்பு திருத்திக் கொள்ள வேண்டிய உள்ளடக்கம் மட்டுமல்ல, ஒத்துழைப்பு துறைகளும் உள்ளன. அவை சீன-அமெரிக்க உறவுகளை மேம்படுத்துவதற்கும் ஒரு நடைமுறைப்பாதையை உருவாக்கும்.

பல்வேறு விவகாரங்களில் சீன-அமெரிக்க ஒத்துழைப்பு எவ்வளவு முன்னேற்றம் அடைய முடியும் என்பது மூன்று சீன-அமெரிக்க கூட்டு அறிக்கைகளை அமெரிக்கத் தரப்பு பின்பற்றுமா, சீனாவின் மீதான தவறான கருத்துக்களை மாற்றிக் கொள்ளுமா, இரு நாட்டு அரசுத் தலைவர்களின் ஒத்த கருத்தை உண்மையாகச் செயல்படுத்த முடியுமா ஆகியவற்றைப் பொறுத்திருக்கின்றது.