சீரான போட்டிக்கு சீனா வரவேற்பு
2022-07-10 17:09:49

2018ஆம் ஆண்டில் சீனா மீது அமெரிக்காவின் டிரம்ப் அரசு வர்த்தகப் போரைத் தொடங்கியது. அன்று தொடங்கி, மேலை நாடுகளின் தொழில் நுட்பத் திருடர் என்று, சீனாவை அமெரிக்கா களங்கப்படுத்தி வருகிறது. ஆனால், இத்தகைய குற்றச்சாட்டுக்கான சான்றுகள் எதையும் அமெரிக்க உளவு நிறுவனங்கள் இதுவரையிலும் வெளியிட முடியவில்லை. அதே வேளையில், அந்நிறுவனங்கள், சீனா மற்றும் உலகளவில் பல நாடுகளில் பொருளாதாரம் சார்ந்த உளவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்கான ஆதாரங்கள் இடைவிடாமல் வெளியாகி வருகின்றன. உலகில் மிக பெரிய, நீண்டகால சவால் யார் என்ற கேள்விக்குப் பதில் தெள்ள தெளிவாக உள்ளது.

ஜுலை 7ஆம் நாள் 10 வணிக ஒத்துழைப்புத் திட்டப்பணிகளை உள்ளடக்கிய, சுமார் 20 கோடி யூரோ மதிப்பு கொண்ட முதலீட்டு உடன்படிக்கையில், சீனாவும் ஜெர்மனியும் கையொப்பமிட்டன. அன்னிய முதலீடு, சீனச் சந்தை மீதுள்ள நம்பிக்கையை இது எடுத்துக்காட்டுகிறது. அமெரிக்க உளவு நிறுவனங்கள், விடுத்த அச்சுறுத்தல் வணிகத் துறையினரைப் பயமுறுத்தாது. இத்தகைய மிரட்டல்கள் பயன் பெறாது.

நியாயமான சீரான போட்டியை வரவேற்பதுடன், நேர்மையற்ற பூச்சியம் கூட்டுத் தொகை விளையாட்டை சீனா எதிர்க்கிறது.