காஷ்மீரின் அமர்நாத்தில் வெள்ளம் – 16 பேர் உயிரிழப்பு
2022-07-10 16:22:25

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அமர்நாத் பகுதியில் மேகவெடிப்பால் கனமழை பெய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது. மேலும், 40 பேரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அமர்நாத்தில் முகாமிட்டிருந்த யாத்ரிகர்களின் கூடாரங்கள், சமையல் கூடங்கள் உள்ளிட்டவை அடித்துச் சென்றது. 15 ஆயிரம் பக்தர்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.