ஜப்பானின் மேலவை தேர்தலில் ஆளும் கூட்டணி வெற்றி
2022-07-11 17:23:55

ஜப்பான் நாடாளுமன்றத்தின் 26ஆவது மேலவை தேர்தலின் முடிவு 11ஆம் நாள் வெளியிடப்பட்டது. ஆளும் லிப்ரல் ஜனநாயகக் கட்சி, பெரும்பான்மையைப் பெற்றது. இதன் விளைவாக, மேலவையில் ஜப்பானின் அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்தத்துக்கு ஆதரவான உறுப்பினர்களின் எண்ணிக்கை, மூன்றில் இரண்டு பகுதியைத் தாண்டியுள்ளது கவனிக்கத்தக்கது. அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தத்துக்கு வாய்ப்பு அதிகம்.

ஜப்பானின் மேலவைத் தேர்தல், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. ஒவ்வொரு முறையும், பாதி உறுப்பினர்கள் புதிதாகத் தேர்வு செய்யப்படுவர்.