சீனாவில் வெற்றிகரமாக விரிவாக்கப்பட்ட வறுமை ஒழிப்பு சாதனைகள்
2022-07-11 09:57:17

இவ்வாண்டு முற்பாதியில், பல்வேறு துறைகளின் முயற்சியுடன், சீனாவின் வறுமை ஒழிப்பு சாதனைகள் வெற்றிகரமாக விரிவாக்கப்ட்டுள்ளன. பெருமளவிலான மக்கள் வறுமை நிலைக்கு மீண்டும் திரும்பும் சம்பவம் நிகழவில்லை என்று சீன தேசிய கிராமப்புற மறுமலர்ச்சி பணியகம் 11ஆம் நாள் தகவல் வெளியிட்டது.

கோவெட்-19 நோய் தொற்று, வறுமை ஒழிப்பு பணிக்கு ஏற்படுத்திய பாதிப்பைச் சமாளிக்கும் வகையில், இப்பணியகம், சிறப்பு குழு ஒன்றை உருவாக்கி, வறுமை ஒழிப்பு நிலைக்கு மீண்டும் திரும்பும் வாய்ப்பு கொண்ட மக்களைக் கண்காணிப்பது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது முதலிய 24 நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இப்போது வரை, கண்காணிக்கப்பட்டவர்களில் 65 விழுக்காட்டினர் வறுமை நிலைக்கு மீண்டும் திரும்பும் இடர்பாடு நீக்கப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள மக்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் இந்த இடர்பாடு நீக்கப்படும் என்று இப்பணியகத்தின் அதிகாரி சு ஜியன் மின் தெரிவித்தார்.