பண்டைய நகரில் உலா சென்ற வெளிநாட்டு இளைஞர்கள்
2022-07-11 17:33:57


பட்டுப்பாதை தொடர்பாக ஆய்வு செய்த வெளிநாட்டு இளைஞர்களின் குழு அண்மையில் சிச்சுவான் மாநிலத்தின் லாங் ச்சொங் என்ற பண்டைய நகரின் சின்னமான ச்சொங் தியென் கட்டிடத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டது.இக்குழுவைச் சேர்ந்த பன்னாட்டு மாணவர்கள் கலைநயமிக்க ஹன் இன ஆடையை அணிந்து, எண்ணெய் காகித குடையை எடுத்து, இந்நகரின் அழகிய காட்சி மற்றும் பாரம்பரிய கட்டிடக் கலையைக் கண்டுரசித்தனர். 

மலேசியாவைச் சேர்ந்த ஒரு இளைஞர் கூறுகையில், முதன்முறையாக ஹன் இன ஆடையுடன், பண்டைய கல் வீதியில் நடந்து ஆயிரம் ஆண்டுகளின் வரலாற்றுப் பண்பாட்டை உணர்ந்து கொள்வது, சிறப்பான அனுபவம் என்று தெரிவித்தார்.