இலங்கை நிலைமையில் சீனா கவனம்
2022-07-11 18:53:53

இலங்கையில் பெருமளவு எதிர்ப்பு நடவடிக்கை நிகழ்ந்த பிறகு, தனது பதவியிலிருந்து விலகுவதாக இலங்கை அரசுத் தலைவர் அறிவித்தார். இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் 11ஆம் நாள் கூறுகையில் இலங்கை சீனாவின் நட்பார்ந்த அண்டை நாடாகவும்ஒத்துழைப்புக் கூட்டாளி நாடாகவும் உள்ளது. இலங்கையின் பல்வேறு துறைகளில் நாடு மற்றும் மக்களின் அடிப்படை நலன்களைக் கருதி, ஒற்றுமையுடன் ஒத்துழைத்து, இன்னல்களைச் சமாளித்து, சமூக நிதானம், பொருளாதார மீட்சி, மக்கள் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றைக் கூடிய விரைவில் நனவாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.