மத்திய கிழக்குப் பிரதேசத்தில் பைடன் பயணம் மேற்கொள்வதன் உள்நோக்கம்
2022-07-12 09:56:00

அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் நடப்பு வாரத்தில் இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் ஜோர்டான் ஆற்றின் மேற்கு கரை, சௌதி அரேபியா ஆகியவற்றில் பயணம் மேற்கொள்ள உள்ளார். பதவியேற்ற பிறகு மத்திய கிழக்கு பிரதேசத்தில் அவர் பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறை. வாஷிங்டன் போஸ்ட் நாளேட்டில் அவர் எழுதிய கட்டுரையில், இப்பயணம் அமெரிக்கப் பாதுகாப்புக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்ற தெரிவித்ததோடு, சீனாவுடனான போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஆனால், உலக எண்ணெய் சந்தையில் ரஷிய-உக்ரைன் மோதலால் ஏற்பட்ட பதற்ற நிலை இல்லாமல் இருந்திருந்தால், அமெரிக்க அரசுத் தலைவர் மத்திய கிழக்கு பிரதேசத்துக்குச் செல்லத் தேவையில்லை என்று சிஎன்என் செய்தி நிறுவனம் நேரடியாக தெரிவித்தது.

தற்போது தீவிரமாக அதிகரித்து வரும் எண்ணெய் விலை, கடுமையான பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி பற்றிய அமெரிக்கர்களின் கவலை ஆகியவை இடைக்கால தேர்தலை எதிர்நோக்கும் பைடன் அரசுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. எண்ணெய் சந்தையை நிதானப்படுத்தும் திறன் கொண்ட ஒரேயொரு நாடான சௌதி அரேபியா, இந்நிலைமையை மாற்றக் கூடிய திறவுகோலாகும்.

தற்போதைய அமெரிக்க அரசியல் துறையில் சீனாவுக்கு எதிரான செயல்கள் மிகவும் சரியானதாக இருப்பதால், பைடன் தனது கட்டுரையில் சீனா பற்றி குறிப்பிட்டதன் காரணமாகும். சீனாவுடனான போட்டி பற்றிய கூற்று, அமெரிக்க அரசியல்வாதிகள் பொது மக்களின் கவனத்தை மாற்றி, சௌதி அரேபிய பயணத்துக்கு வாதாடும் ஒரு கருவியாகும். மத்திய கிழக்கு பிரதேசத்தை சீனா மற்றும் ரஷியாவுடன் போட்டியிடுவதற்கான அரங்காக அமெரிக்கா மாற்ற விரும்பும் நோக்கத்தையும் இது வெளிப்படுத்தியுள்ளது.