இலங்கையின் புதிய அரசுத் தலைவர் தேர்தல்
2022-07-12 10:03:20

இலங்கை நாடாளுமன்றத்தில் 20ஆம் நாள் வாக்கெடுப்பு மூலம் புதிய அரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நாடாளுமன்றத் தலைவர் அபேவர்தனா 11ஆம் நாள் தெரிவித்தார்.

இலங்கையின் அரசியல் கட்சி தலைவர்கள் அன்று கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானத்தின்படி, நாடாளுமன்றக் கூட்டம் வரும் 15ஆம் நாள் தொடங்க உள்ளது. 19ஆம் நாள் அரசுத் தலைவர் பதவிக்கான பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும். 20ஆம் நாள் புதிய அரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். பல்வேறு கட்சிப் பிரிவுகள் பங்கெடுக்கும் அரசின் உருவாக்கத்துக்கு புதிய அரசுத் தலைவர் பொறுப்பேற்க உள்ளார் என்று அபேவர்தனா அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.