தைவான் நீரிணை நிதானத்திற்கு முக்கிய ஆதாரம் ஒரே சீனா கொள்கை
2022-07-12 10:34:47

பிரதேச திறப்பு கொள்கையில் ஊன்றி நிற்பது குறித்து சீன அரசவையின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, ஜுலை 11ஆம் நாள் ஆசியான் செயலகத்தில் உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில்,

தைவான் நீரிணையின் நிலைத்தன்மைக்கு ஒரே சீனா என்ற கொள்கை மிக முக்கியமான ஆதாரமாகும்.  ஒரே சீனா கொள்கையை வெளிப்படுத்தும் “1992ஆம் ஆண்டு கருத்தொற்றுமையை” தற்போதைய தைவான் அதிகார வட்டாரம் கைவிடுப்பது, தைவான் நீரிணையில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டதற்கு அடிப்படை காரணமாகும். இது இருக்கரையுறவின் அமைதியான வளர்ச்சியைச்  சீர்குலைத்துள்ளது. அதேவேளையில், அமெரிக்கா தைவான் விவகாரத்தைப் பயன்படுத்தி, சீனாவின் வளர்ச்சியைத் தடை செய்ய முயன்று வருகின்றது என்றார்.

ஒரு நாட்டின் அரசுரிமையையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் பேணிக்காக்க வேண்டும் என்று அண்மையில் அமெரிக்கா பல முறையில் வலியுறுத்தியது. அமெரிக்காவின் இக்கருத்தில் சீனா உயர்வாக கவனம் செலுத்துகின்றது. ஆனால், அமெரிக்கா இரட்டை வரையறையை மேற்கொள்ளக் கூடாது. தைவான் பிரச்சினையில், சீனாவின் அரசுரிமைக்கும் பிரதேச ஒருமைபாட்டுக்கும் மதிப்பளிக்க வேண்டும். இவை பெரிய நாடான அமெரிக்காவின் தேசிய நற்பெயரைச் சோதனை செய்யும் நடவடிக்கையும் கூட ஆகும் என்று வாங் யீ தெரிவித்தார்.