தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பு திட்டம் வெளியீடு
2022-07-12 17:21:45

சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையமும், போக்குவரத்து துறை அமைச்சகமும் ஜுலை 12ஆம் நாள் தேசிய நெடுஞ்சாலை வலையமைப்புத் திட்டத்தை வெளியிட்டுள்ளன. இதன்படி, 2035ஆம் ஆண்டுக்குள், சீனத் தேசிய நிலை நெடுஞ்சாலையின் நீளம் சுமார் 4 இலட்சத்து 61 ஆயிரம் கிலோமீட்டரை எட்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வலையமைப்பில் தேசிய உயர்வேக நெடுஞ்சாலையின் மொத்த நீளம் சுமார் 1 இலட்சத்து  62 ஆயிரம் கிலோமீட்டர் எட்டும். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போக்கில், முடிந்தளவில் நிரந்தர விளைநிலங்கள் கையகப்படுத்த மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது. 2035ம் ஆண்டுக்குள், பசுமை, நுண்ணறிவு, பாதுகாப்பு ஆகிய வளர்ச்சி வழிக்காட்டலுடன் பரந்தளவிலான பரப்பு, பசுமை மற்றும் உயர் செயல்திறனுடைய நவீனமயமான தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பை சீனா கட்டியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.