அமைதி காப்பு நடவடிக்கைக்கான சீனாவின் முன்மொழிவுகள்
2022-07-13 10:15:27

12ஆம் நாள் நடைபெற்ற  அமைதி காப்பு நடவடிக்கையின் நெடுநோக்கு தொடர்பு பற்றிய ஐ.நா பாதுகாப்பவையின் விவாதக் கூட்டத்தில், ஐ.நாவுக்கான சீன நிர்ந்தர பிரதிநிதி சாங் ஜுன் உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில்,

நெடுநோக்கு தொடர்பை 4 வழிகளில் வலுப்படுத்த வேண்டும். முதலாவதாக, மேலும் வலிமைமிக்க கூட்டாளியுறவை உருவாக்க வேண்டும். இரண்டாவதாக, அமைதி காப்பு படை வீரர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். மூன்றாவதாக, அமைதி காப்பு நடவடிக்கையின் பயனுள்ள நடைமுறையாக்கத்தை முன்னேற்ற வேண்டும். நான்காவதாக, நெடுநோக்கு தொடர்பு திறனை வலுப்படுத்த வேண்டும் என்றார்.