சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் 77வது சிறப்புச் செய்தியாளர் கூட்டம்
2022-07-13 15:30:16

சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் 77வது சிறப்புச் செய்தியாளர் கூட்டம் ஜூலை 12ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேச அரசின் செய்தித் தொடர்பாளர் ஷு குய்சியாங் கூறுகையில், கீழை மற்றும் மேலை நாடுகளுக்கிடையிலான நாகரிகப் பரிமாற்றத்தின் முக்கிய பாதையாகவும், பட்டுப்பாதை பொருளாதார மண்டலக் கட்டுமானத்தின் மைய பகுதியாகவும் சின்ஜியாங் திகழ்கிறது. இவ்வாண்டின் ஜூலை 4 முதல் 9ஆம் நாள் வரை, துருக்கி, நியூசிலாந்து, பிரான்ஸ், ரஷியா, மலேசியா, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த தொழில் மற்றும் வணிக துறையின் பிரதிநிதிகள் சின்ஜியாங்கில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் சின்ஜியாங்கிலுள்ள தொழில் மற்றும் வணிக துறையினர்களுடன் பரிமாற்றம் மேற்கொண்டு, பெரும் சாதனைகளைப் பெற்றனர் என்று தெரிவித்தார்.

மேலும், பல்வேறு நாடுகளின் நெருங்கிய பொருளாதார தொடர்பு, ஆழமான ஒத்துழைப்பு, பரந்துபட்ட வளர்ச்சி வாய்ப்பு ஆகியவற்றை முன்னேற்றவும், பல்வேறு தரப்புகளுடன் இணைந்து அருமையான எதிர்காலத்தைக் கூட்டாக உருவாக்கவும் சின்ஜியாங் விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.