சீனாவின் புதிய தரவு அஞ்சல் செயற்கை கோள் ஏவுதல்
2022-07-13 09:53:56

சீனாவின் தியன்லியன்-2-3 எனும் செயற்கைக் கோள் ஜுலை 13ஆம் நாள் அதிகாலையில் ஷிட்சாங் செயற்கைக் கோள் ஏவு மையத்திலிருந்து லாங்மார்ச்-3பி ஏவூர்தி மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு, திட்டமிட்ட சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் 2ஆவது தலைமுறை புவி ஒத்திசை சுற்றுவட்டப் பாதை தரவு அஞ்சல் செயற்கைக் கோள் இதுவாகும். மனிதரை ஏற்றிச் செல்லும் விண்கலத்துக்கும், தாழ்ந்த மற்றும் நடுத்தர சுற்றுவட்டப் பாதையில் இயங்கும் வள ஆய்வு செயற்கைக் கோள்களுக்கும் தரவு அஞ்சல், தொலைக்கணிப்பு, கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு உள்ளிட்ட சேவைகளை இது வழங்கும். மேலும், விண்கலத்தின் ஏவுதலுக்கும் இது ஆதரவளிக்கும்.