அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியடையும்
2022-07-13 16:56:23

அமெரிக்காவின் பொருளாதாரம், அடுத்த ஆண்டு முதல் வீழ்ச்சியைக் கண்டு, 6 மாதங்களுக்கு மேல் மந்தமாக இருக்கும் என்று நெவிகேட்டர் முதலீட்டாளர் தொழில் நிறுவனத்தின் இயக்குநர் கைல் ஷொஸ்டக், ரஷிய டாஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இந்த வீழ்ச்சி, பொருளாதார ரீதியான அனைத்து துறைகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். நவீன அமெரிக்கா, நீண்டகால பொருளாதார மந்த நிலையை முன்பு கண்டிருந்தாலும், எதிர்வரும் வீழ்ச்சி, கடும் வேதனையை மட்டுமல்ல ஆழ்ந்த தாக்கத்தையும் விளைவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.