2022ல் சீன ஏற்றுமதி இறக்குமதி தொகை அதிகரிப்பு
2022-07-13 18:54:56

சீனச் சுங்கத் துறைத் தலைமை பணியகம் 13ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 8 காலாண்டுகளில் சீனாவின் வெளிநாட்டு வர்த்தக ஏற்றுமதி இறக்குமதித் தொகை தொடர்ந்து அதிகரித்துள்ளது. இவ்வாண்டின் முதல் 6 திங்களில் மொத்த வெளிநாட்டு வர்த்தகத் தொகை, 19.8 இலட்சம் கோடி யுவானை எட்டியுள்ளது.

2022ஆம் ஆண்டின் முற்பாதியில், வேளாண் உற்பத்திப் பொருட்கள், இரும்பு தாதுக்கள், பருத்தி முதலியவற்றின் இறக்குமதி அளவு அதிகரித்துள்ளது. இதைத் தவிர, 70 ஆயிரத்துக்கும் மேலான வெளிநாட்டு உணவு தொழில் நிறுவனங்கள் சீனாவில் வணிகம் செய்வதற்குப் பதிவு செய்துள்ளன. வாகன ஏற்றுமதித் தொகை 51.1 விழுக்காடு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.