அமெரிக்காவில் பங்கு குறியீடுகள் வீழ்ச்சி
2022-07-13 10:30:46

உள்ளூர் நேரப்படி ஜூலை 12ஆம் நாள், அமெரிக்காவின் பங்குச் சந்தையில் 3 பங்கு குறியீடுகள் வீழ்ச்சியடைந்தன. Dow Jones தொழிற்துறை பத்திரத்தின் சராசரி குறியீடு 0.61 விழுக்காடு குறைந்துள்ளது. S&P500 பங்கு குறியீடு 0.92 விழுக்காடு குறைந்துள்ளது. NASDAQ பங்கு குறியீடு 0.95 விழுக்காடு குறைந்துள்ளது.

பண வீக்கம் தொடர்ந்து உயர் நிலையில் இருப்பது, பண வீக்கத்தைச் சமாளிக்கும் வகையில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி அதிகரிப்பு பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்துவது ஆகியவை பற்றி கவலைப்படுவதால், அமெரிக்கப் பங்கு சந்தை அழுத்தத்தை எதிர்நோக்கி வருகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.