கொழும்புவில் ஊரடங்கு உத்தரவு
2022-07-14 17:13:06

இலங்கையின் கொழும்புவில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினர்களுக்கும் இடையே நடந்த மோதலைத் தொடர்ந்து, வியாழன் மதியம் முதல் வெள்ளி காலை வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது, தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கே அந்நாட்டின் இலங்கையின், தற்காலிக அரசுத் தலைவராக பொறுப்பு வகிக்கிறார்.

நாட்டில் சட்டம் ஒழுங்கை சரி செய்யும் விதம், பாதுகாப்புப் படை, ராணுவக் காமாண்டர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக ரணில் புதன்கிழமை தொலைக்காட்சி உரையில் தெரிவித்தார்.

கொழும்புவில் உள்ள தலைமை அமைச்சர் அலுவலகத்தைச் சூழ்ந்து கொண்ட போராட்டக்காரர்கள், அரசுத் தலைவரும், தலைமை அமைச்சரும் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனிடையே,  நாடளவில் அவசரநிலையை புதன்கிழமை ரணில் விக்ரமசிங்கே பிரகடனம் செய்தார்.