சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டிய அமெரிக்க அரசியல்வாதிகள்
2022-07-14 20:20:44

அமெரிக்க முன்னாள் அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்பின் தேசியப் பாதுகாப்பு விவகாரங்களுக்கான உதவியாளர் போல்டன் 12ஆம் நாள் அமெரிக்கச் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் "மற்ற நாடுகளில் ஆட்சிக்கவிழ்ப்புகளுக்குத் திட்டமிட அமெரிக்கா உதவியது என்று தெரிவித்தார்.

போல்டனின் கருத்துக்கள் அமெரிக்கா "ஜனநாயகத்தின் மிகப் பெரிய எதிரி" என்பதைக் காட்டுகின்றது என்று பொலிவிய முன்னாள் அரசுத் தலைவர் ஈவோ மோரல்ஸ் தெரிவித்தார்.

கிடைத்துள்ள தரவுகளின் படி, 20ஆம் நூற்றாண்டு தொடங்கி, லத்தீன் அமெரிக்காவில் பத்துக்கும் மேற்பட்ட வெற்றிகரமான அல்லது தோல்வியுற்ற ஆட்சிக்கவிழ்ப்புகளுக்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், மேற்கு ஆப்பிரிக்காவில் நான்கு ஆட்சிக் கவிழ்ப்புகளுக்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. தங்கள் கைகளில் மற்ற நாட்டு மக்களின் இரத்தக் கறை கொண்ட அமெரிக்க அரசியல்வாதிகள் மீது ஐநா அமைப்புகளின் விசாரணை நடத்தப்பட வேண்டும்.