அழுத்தத்தைச் சமாளித்து மீட்சியடைந்த சீன வெளி வர்த்தகம்
2022-07-14 10:55:19

இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் சீன வெளி வர்த்தகத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தரவுகளை சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் ஜூலை 13ஆம் நாள் வெளியிட்டது. சீனா மற்றும் வெளிநாட்டுச் சந்தை நிறுவனங்களின் எதிர்பார்ப்பை இச்சாதனை தாண்டியுள்ளது.

இத்தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 3 மாதங்களில் சீன வெளி வர்த்தகம் சீராக வளர்ச்சியடைந்தது. ஆனால், ஏப்ரல் திங்கள் யாங்சி ஆற்றுக் கழிமுக பிரதேசத்தில் கோவிட்-19 நோய் தொற்று பரவல், வெளி வர்த்தகத்தைக் கடுமையாக பாதித்துள்ளது. இருப்பினும், கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணி சீராக மேற்கொள்ளப்படுவதுடன், மே மற்றும் ஜுன் திங்கள் மீட்சி அடைந்து வருகிறது.

உலகத்துக்கு சீனத் தயாரிப்பு தேவையானது. அத்துடன், சீனாவின் உள்நாட்டு உற்பத்திக்கான தேவை, வெளி வர்த்தகத்துக்கு வலிமை மிக்க ஆதரவளித்துள்ளது. இந்தக் காரணங்களால், சீனாவின் வெளி வர்த்தகம் அழுத்தம் கொண்ட சூழ்நிலையில் இருந்த போதிலும் மீட்சி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.