ஊழல் எதிர்ப்புக்கான பிரிக்ஸ் அமைச்சர்கள் கூட்டம்
2022-07-14 11:42:19

ஊழல் எதிர்ப்புக்கான முதலாவது பிரிக்ஸ் அமைச்சர்கள் கூட்டம் ஜுலை 13ஆம் நாள் காணொளி வழியில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், ஒழுங்கு பரிசோதனைக்கான மத்திய ஆணையத்தின் துணை செயலாளருமான யாங் சியாவ்தூ இதில் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், ஊழல் எதிர்ப்பு பல்வேறு நாடுகள் எதிர்கொள்ளும் பொது கடமையாகும். பிரிக்ஸ் நாடுகள் அரசியல் கருத்தொற்றுமையை உருவாக்கி, ஊழலுக்கான புகலிடத்தை மறுப்பது தொடர்பான முன்மொழிவைக் கூட்டாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஊழலுக்கு எதிரான மேலாண்மை திறனை உயர்த்தி, தூய்மையான வணிகச் சூழலைக் கூட்டாக உருவாக்க வேண்டும். பலதரப்புவாதத்தைப் பேணிக்காத்து, ஊழல் எதிர்ப்புக்கான நியாயமான சர்வதேச மேலாண்மை அமைப்பை உருவாக்கி, மனிதகுலத்துக்கான பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தையும் உலக வளர்ச்சிக்கான பொது சமூகத்தின் கட்டுமானத்தையும் முன்னேற்றுவதில் புதிய பங்காற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.