நீரிணை மன்றத்தின் மாநாட்டில் வாங் யாங் பங்கேற்பு
2022-07-14 10:13:04

 

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் கமிட்டித் தலைவருமான வாங் யாங் 13ஆம் நாள் சியாமென் நகரில் 14ஆவது நீரிணை மன்றத்தின் மாநாட்டில் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் கூறுகையில், நீரிணை மன்றமானது, தைவான் நீரிணை இருகரைகளிடையே அரசு சாரா பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கான சிறப்பு நிகழ்வாகவும், சக நாட்டவர்கள் ஒருவருக்கு ஒருவர் அன்புணர்வை வெளிப்படுத்தும் மேடையாகவும் திகழ்கிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் 2 நாட்களுக்கு முன் நடப்பு மன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் தைவான் இளைஞர்களுக்கு வழங்கிய பதில் கடிதத்தில், அவர்கள் மீதான அக்கறையும், இம்மன்றத்தின் மீதான கவனமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இருகரைகளின் இளைஞர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு, கூட்டு முயற்சிகளை மேற்கொண்டு, தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சிப் போக்கில் பங்காற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.